Introduction
Sri
Venkatadvari kavi also known as Aparadesikan (of fifteenth century), authoured
Sri Lakshmi Sahasram, a composition of thousand verses on Sri Mahalakshmi. He lived at Arasaanipaalai, a village near Kanchipuram
where several generations of his ancestors lived performing hundreds of yagas
and earning the title, dikshitar. Even
today a yubasthamba, a stone pillar that is common at a yagasala can be seen at
Arasaanipaalai. Sri Venkatadvari was an expert of tarka,
vyakarana, mimamsa, Vedanta, jyotisha and mantra saastra. He was named
Venkatadvari as he offered all his yaga and yagna to Lord Sri Venkatesa of Tirupati.
Venkatadvari kavi composed Acharya panchasat,
Sravanaanandam, Yaadavaraaghaviyam, Subhashita kausthubam, Varadathbudhayama,
Pradyumnaananda Naatakam and Vishvaguna champu.
Sri Lakshmi Sahasram is a part of the epic, Vishvaguna champu. There is folklore that Sri Venkatadvari kavi lost
his sight when he was composing Vishvaguna champu and regained it by composing
SriLakshmi Sahasram.
Sri
Venkatadvari kavi offers a flower bouquet of twenty five ‘stabakam’ to Sri
Mahalakshmi through his SriLakshmi Sahasram.
Being a great devotee of Swami Vendata Desikan, Sri Venkatadvari has
composed his twenty five stabakams along the lines of Swami Vendanta Desikan’s
twenty five slokas of Sristhuti. Like
Swami Desikan, he has interspersed Sri Lakshmi mantra in several of the verses.
Sri Lakshmi Sahasram is known to confer
several benefits upon those who recite it.
A detailed
commentary of the verses of Sri Lakshmi Sahasram can be found at www.alamelumanga.org along with several
color images of SriMahalakshmi Tayar from various Divya desams. Several people who enjoyed the ebook
mentioned that the size of the book is not conducive for downloading and
reading it in the paper form. Hence,
with the blessing of Srimadh Andavan, we are now attempting to bring out a
smaller book with the slokas in Sanskrit and Tamil along with brief commentary
in English and Tamil. As a preliminary
effort, we have now started this blog lakshmisahasram.blogspot.com where we
plan to post two or three slokas every day.
We sincerely urge all the devotees to read the commentaries and give
your feedback/comments/suggestions so that we can put together a good book for
recitation. We humbly seek the blessings
of Emperuman and Sri Padmavati Taayar for the successful completion of this
effort.
முன்னுரை
லக்ஷ்மீ ஸஹஸ்ரம்
ஆயிரத்தெட்டு பாடல்களைக் கொண்ட லக்ஷ்மீ ஸஹஸ்ரம் எனப்படும் இந்நூலை ஸ்ரீ வேங்கடாத்வரி என்றும் அபரதேசிகன்
என்றும் அழைக்கப்படும் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவி ஒருவர் இயற்றினார். காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள அரசாணிப்பாலை என்ற ஊரில் அவரது பரம்பரையினர் நூற்றுக்கணக்கான
யாகங்களை செய்து அதனால் தீட்சிதர் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வந்தனர். இன்றுகூட அவ்விடத்தில் யாகசாலையில் இருக்கும்
யூபஸ்தம்பத்தைக் காணலாம். ஸ்ரீ வேங்கடாத்வரி, தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸம்,
வேதாந்தம், ஜோதிடம் மற்றும் மந்திர சாஸ்திரம் ஆகியவற்றில் தலைசிறந்தவராக
விளங்கினார். அவர் தனது யாகயக்ஞங்களை
ஏழுமலையானுக்கு அர்ப்பணித்ததால் வேங்கடாத்வரி என்று அழைக்கப்பட்டார்.
ஸ்ரீ
வேங்கடாத்வரி கவி, ஆசார்ய பஞ்சாசத், சிரவணானந்தம், யாதவ ராகவீயம், சுபாஷித
கௌஸ்துபம் விஷ்வகுணசம்பு வரதாத்புதையசம்பு,
பிரத்யும்னானந்த நாடகம் என்ற நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் விஷ்வகுண சம்பு என்னும் நூலின் ஒரு
பகுதியே லக்ஷ்மீ ஸஹஸ்ரம் ஆகும். விஷ்வகுணசம்புவை இயற்றும்போது ஸ்ரீ வேங்கடாத்வரி
அவர்கள் தமது பார்வையை இழந்தார் என்றும் அதனை லக்ஷ்மீ ஸஹஸ்ரத்தைப் பாடியபின் மீண்டும் பெற்றார் என்றும்
ஒரு செவிவழிக் கதை உண்டு.
லக்ஷ்மீ ஸஹஸ்ரம் என்னும் இந்நூலின் மூலம்
ஸ்ரீவேங்கடாத்வரி கவி இருபத்தைந்து மலர்செண்டுகளை (ஸ்தபகங்களை) ஸ்ரீமகாலட்சுமிக்கு
சமர்ப்பிக்கின்றார். ஸ்வாமி தேசிகனிடம் பெரும்பக்தி கொண்டிருந்த அவர், ஸ்வாமி
தேசிகனது ஸ்ரீஸ்துதியின் இருபத்தைந்து ஸ்லோகங்களின் அடியையொற்றி இந்த இருபத்தைந்து
ஸ்தபகங்களை இயற்றியுள்ளார். அவற்றில் ஸ்வாமி வேதாந்த தேசிகனைப் போல ஸ்ரீவேங்கடாத்வரி
கவியும் லக்ஷ்மீ மந்திரத்தின் அட்சரங்களைப் பல பாடல்களில் புகுத்தியுள்ளார்.
அதனால் லக்ஷ்மீ ஸஹஸ்ர பாராயணம் பல்வேறு பயன்களை அளிப்பதாக உள்ளது.
லக்ஷ்மீ ஸஹஸ்ரத்தின் மிக
விரிவான விளக்கவுரை www.alamelumanga.org
என்னும் வலைத்தளத்தில் உள்ளது. பல
திவ்யதேசங்களில் உள்ள ஸ்ரீமகாலட்சுமியின் படங்களும் அங்கு உள்ளன. அந்த மின்னணு நூலைப் படித்த பலரும் அதை வலையிறக்கம்
செய்து புத்தகவடிவில் படிக்க சிரமமாக இருப்பதாகக் கூறியதால் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத்
ஆண்டவனின் அனுகிரகத்துடன் லக்ஷ்மீ
ஸஹஸ்ர ஸ்லோகங்களுக்கு சுருக்கமான
விளக்கவுரையுடன் எளிய புத்தகவடிவில் வெளியிடும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம். சமஸ்கிருதத்திலும் தமிழிலும் ஸ்லோகமும் அதன்
எளிய பதவுரை ஆங்கிலத்திலும் தமிழிலும் தரவேண்டும் என்பது எமது ஆவல். அந்த முயற்சியின் முன்னோடியாக இந்த பிளாக்கில்
ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ஸ்லோகங்கள் என்ற எண்ணிக்கையில் அவற்றைப் பதிப்பிக்கத்
தொடங்கியுள்ளோம். பெரியோர்கள் அதனைப்
படித்து தவறிருந்தால் சுட்டிக்காட்டும்படி வேண்டுகிறோம். பலரது கூட்டு முயற்சியால் ஆஸ்திகர்களுக்கு ஒரு
நல்ல பாராயண நூல் கிடைக்க எம்பெருமானையும் பத்மாவதித் தாயாரையும்
பிரார்த்திக்கிறோம்.
excellent work. waiting for the meaning book
ReplyDeleteuthamam. adhi uthamam
ReplyDelete