Sri
Lakshmi Sahasram
1.
Praarambha stabakam
Sri
Venkatadvari kavi begins his composition with the invocation to Goddess Sri
Padmavati at Thirucchanur and salutations to the lineage of preceptors. He says that he has begun to sing
SriMahalakshmi’s glory to purify his tongue that has so far been praising unworthy
kings. He impresses us with his humility
when he remarks that his effort to compose this work is like a merchant selling
unworthy beads in the market while other merchants are trading precious stones.
He pacifies himself by saying that his
efforts are like that of Kuchela who, with the offering of a mere handful of
pounded rice obtained immeasurable benefits from Krishna. He concludes this
section with the twentieth verse where he expresses his confidence that Goddess
Sri Padmavati will accept his offering as he has seen Lord Siva adorning the
River Ganga on his head just because the river was associated with Lord
Srinivasa’s sacred feet. (We have
already seen in the introduction that SriVenkatadvari used to offer all his
sacred rituals to Lord Srinivasa).
ப்ராரம்ப ஸ்தபகம்
ஸ்ரீ வேங்கடத்வரி கவி, திருச்சானூரில் உறையும் பத்மாவதித் தாயாரையும் தனது குருபரம்பரையைப்
போற்றித் தனது காப்பியத்தை தொடங்குகிறார்.
இதுவரை தகுதியற்ற அரசர்களைப் போற்றி வந்த தனது நாவைத் தூய்மைப்படுத்தவே தான்
ஸ்ரீமகாலக்ஷ்மியின் பெருமையைப் பாடத் தொடங்கியதாகக் கூறும்
அவர், தனது அடக்கத்தைப் புலப்படுத்தும் விதமாக, தான் இக்காவியத்தைப் புனைய முயல்வது
பல வியாபாரிகளும் சிறப்பு மிகுந்த ரத்தினங்களை விற்கும் கடைவீதியில் ஒருவன் குந்துமணியை விற்க முயல்வதைப் போல உள்ளது என்று கூறுகிறார். ஆனாலும் ஒரு
கைப்பிடி அவலைக் கொடுத்துவிட்டு பெரும் பேற்றைப் பெற்ற குசேலரின் செயல் தனக்கு
மனத்திண்மையை அளிக்கின்றது என்கிறார் அவர். ஸ்ரீனிவாசனின் திருவடி சம்பந்தம்
பெற்றதால் சிவபெருமான் கங்கையைத் தன் தலையில் தங்குவதைப் போல எம்பெருமானின்
சம்பந்தம் பெற்ற தனது பாடல்களை லட்சுமி தேவி அவசியம் ஏற்றுக்கொள்வாள் என்ற தனது
நம்பிக்கையை வெளிப்படுத்தி அவர் இந்த ஸ்தாபகத்தைத் தலைக்கட்டுகிறார். இந்த ஸ்தபகத்தில் உள்ள
ஸ்லோகங்களை இனி அனுபவிப்போம்.
No comments:
Post a Comment